நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று குர்ஆன் குறிப்பிடுகின்றது.
عن أنس بن مالك، قال: قال رسول الله صلى الله عليه وسلم: ” لايؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين
உங்களில் ஒருவர் தனது குழந்தை, அவரது பெற்றோர் மற்றும். உலக மக்கள் அனைவரையும் விட (முஹம்மத் ஆகிய நான்) மிகவும் நேசத்திற்குரிவராக ஆகாத வரை நீங்கள் இறைவிசுவாசம் கொண்டவர்களாக ஆகமாட்டார் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்).
மேற்படி வசனத்திற்கும் ஹதீஸுக்கும் அமைவாக வாழ வேண்டும் என்ற அடிப்படையில் பயிற்றுவிக்கப்பட்ட நீங்கள் பீ.ஜே என்ற தனிமனிதனைப் பின்பற்ற மறைமுகமாக பயிற்றுவிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதே யதார்த்தம். நீங்கள் இதை மறுத்தாலும் விமர்சனம் செய்தாலும் நிலைமை இதுதான். இமாம்களின் வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள்.
குறைமதி உள்ள முரண்பாடுகளின் மொத்த வடிமாகத் திகழும் பீ.ஜே என்ற தனிமனிதனின் நடத்தைகளையும் போக்குகளையும் கருத்துக்களையும் நீங்கள் முன்சென்ற இஸ்லாமிய அறிஞர்களின் வரலாறுகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். அவர்களின் அறிவு, இறை வணக்கங்கள், பேணுதல், நாவடக்கம், வாய்மை போன்ற பல உயரிய அம்சங்களை நீங்கள் இமாமின் தரத்தில் மதிக்கின்ற பீ.ஜே என்பவரின் பழக்க வழக்கங்களோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.
இவரில் காணப்படுகின்ற பல குறைபாடுகளையும் அணுகுமுறைகளையும் அவர்களின் வாழ்வில் நீங்கள் காணமாட்டீர்கள். إن شاء ألله
நீங்கள் அறிவீர்களா?
இவர் எத்தனை அப்பாவி இளைஞர்களை சிறையில் தள்ளக் காரணமாக இருந்துள்ளார்?
எத்தனை அப்பாவிகள் மீது வீண்பழி சுமத்தி, எத்தனை குடும்பங்களை சீரழித்து, நடுத்தெருவில் விட்டுள்ளார்? எத்தனை முஸ்லிம்களின் மானங்களை கப்பலேற்றி உள்ளார்? அறிவீர்களா?

கொஞ்சம் சிந்தனை செய்யுங்கள்.
அவர் மீதுள்ள உங்கள் குருட்டு பக்தி அவரின் மார்க்க அறிவுக் குறைகளை விளங்க முடியாதவாறு உங்களை முடமாக்கி இருந்தது. இப்போதாவது கண்களைக் கொஞ்சம் திறவுங்கள் TNTJ/SLTJ உள்ளுக்கு தற்போது பாரிய குழப்பம் நடந்து கொண்டிருக்கிறது. காரணம் பிற முஸ்லிம்களின் சாபங்கள்.

இப்போதாவது கண் விழியுங்கள்.
தவ்ஹீத் வாதியான ஹாமித் பக்ரி பச்சை குராஃபியாக மாற உங்கள் தொண்டி மகான் காரணமாக இருந்தார்.
தவ்ஹீத் வாதியான ஹாமித் பக்ரி பச்சை குராஃபியாக மாற உங்கள் தொண்டி மகான் காரணமாக இருந்தார்.
த.மு.மு.க. வைப் பிரித்து தனது வருமானத்தில் வளர்ச்சி கண்டார்.
பாக்கரை வெளியேற்றினார்.
பாக்கரை வெளியேற்றினார்.
குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ் நிராகரிப்புக் கொள்கையை சரிகாணாத
அப்பாஸ் அலியின் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அவரை ஜமாத்தில் இருந்து நீக்கினார்
அப்பாஸ் அலியின் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அவரை ஜமாத்தில் இருந்து நீக்கினார்
துடிதுடிப்பான அந்த இளைஞன் அல்தாபிக்கு சில காலங்கள் பதவி கொடுத்து அவனது மதிப்பு ஓங்கி உயரும் வேளை சட்டென நீக்கி அவனை ஓட்டம் காட்டினார்.
இவரது பரபரப்பான ஓடியோ (Audio) மேட்டர் சூடுபிடித்த போது சரியாக நாடி பிடித்துப் பார்த்து தனக்கு வரப்போகும் ஆபத்துக்கு அவாதனித்து, தன்னை கேள்வி கேட்க கூடிய இடத்திலுள்ள ஷம்சுல்லுஹா என்ற பண்பாட்டின்?!?!?! சிகரத்தை மேலான்மைக் குழுவின் தலைமைப் பொறுப்பில் இருந்து நாசூக்காக விலக்கினார்.
இப்படி பல அதிர்வுகளை அரங்கேற்றம் செய்யும் இந்தக் கயவனது நகர்வுகளுக்கு வக்காலத்து வாங்க படிக்காத மார்க்க அறிவில்லாத சில தக்லீத் அடிமைகள் உள்ளனர். அவர்கள் மூலம் இன்னும் பல மாற்றங்களை அவர் செய்வார் என்பது உறுதி.
சில போது TNTJ என்ற அமைப்பின் சொத்துக்களை தனதாக்கிக் கொள்ளும் உக்திகளைக் கூட அவர் செய்தாலும் ஆச்சரியப்படமுடியாது. الله أعلم
உங்கள் உதிரம் சிந்திய பணங்களுக்கு எதிர் காலத்தில் எதுவும் நடக்கலாம். இதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
உங்கள் உதிரம் சிந்திய பணங்களுக்கு எதிர் காலத்தில் எதுவும் நடக்கலாம். இதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
அன்புச் சகோதரர்களே! நீங்கள் சொர்க்கம் செல்லும் ஜமாத் என்று பேசிக்கொள்வீர்கள். அப்படியானால் நீங்கள் அதை விட்டும் வெளியேறினாலோ, அல்லது அவரால் வெளியேற்றப்பட்டாலோ அதன் நிலை என்ன? நீங்கள் இருப்பது நரக அமைப்பா? அல்லது வேறு ஒரு புதிய சொர்க்க அமைப்பா? கொஞ்சம் சிந்தனை செய்யுங்கள்.
அல்லாஹ் நம்மனைவருக்கும் மார்க்கத்தில் நன்மையை நாடுவானாக!
– ரிஸ்வான் மதனி (இலங்கை)

Post A Comment:
0 comments: