Labels

Navigation

பொதுமருத்துவம் மற்றும் கண் பரிசோதனைமுகாம்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
#பொதுமருத்துவம் மற்றும் #கண்_பரிசோதனைமுகாம் நேற்று  (16.09.2018) காலை 10:00 மணி முதல் நண்பகல் 2:00 மணி வரை சிறப்பாக நடைப்பெற்றது. (அல்ஹம்துலில்லாஹ்)

இந்நிகழ்ச்சி சகோ.ரல்பா கான் (அர்-ரஹ்மான் மர்கஸ் தலைவர்) அவர்கள் தலமையில் நடைப்பெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக
உயர்திரு. M.மகேஷ் DSP மாவட்ட துணை கண்காணிப்பாளர் அவர்களும் ,
மண்டபம் சார்பு காவல்துறை ஆய்வாளர் உயர்திரு. அந்தோனி சகாய சேகர் அவர்களும் மற்றும் மண்டபம் காவல் துறை ஆய்வாளர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் 220 க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இதில் 10 க்கும் மேற்ப்பட்ட பயனாளிகளுக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உயர்.திரு காவல்துறை ஆய்வாளர்களுக்கு #அர்_ரஹ்மான்_மர்கஸ் நிர்வாகிகள் புனிதமிகு #திருக்குர்ஆன் தமிழ்மொழி ஆக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. (அல்ஹம்துலில்லாஹ்)

இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற காரணமாக இருந்த மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவமனைக்கும் , இராமநாதபுரம் பார்வை இழப்பு தடுப்பு சங்கத்திற்க்கும் மற்றும் மண்டபம் காவல்துறைக்கும் அர்-ரஹ்மான் நிறுவன அறக்கட்டளை சார்பாக எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


Share
Banner

Ar-Rahman Markas

Post A Comment:

0 comments: